தமிழ்நாடு

சுகேஷுக்கு 4வது முறையாக ஜாமீன் மறுப்பு

சுகேஷுக்கு 4வது முறையாக ஜாமீன் மறுப்பு

webteam

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது.

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகர், வழக்கு தொடர்பாக தன்னிடம் விசாரணைகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் சிறையில் இருப்பது அவசியமில்லை எனக் கூறி ஜாமீன் கேட்டிருந்தார். அதே சமயம் சுகேஷிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளது என காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் அவருக்கு 4வது முறையாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. சுகேஷ் கடந்த ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.