தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

webteam

பெற்றோரின் அலட்சியத்தால் நான்கு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. 

சென்னை பள்ளிக்கரணையில் வசித்துவரும் பாரதிராஜ் என்பவரின் 4 வயது ஆண் குழந்தை நேற்று மாலை காணாமல் போனது. குழந்தையை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், வீட்டில் இருந்த 6 அடி ஆழமுள்ள தண்‌ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. தண்ணீர் தொட்டியை மூடி வைக்காமல் திறந்தபடி வைத்திருந்ததே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 

தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை உ‌டலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.