தமிழ்நாடு

தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை : லண்டன் செல்லும் சென்னை சிறுவர்கள்

தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை : லண்டன் செல்லும் சென்னை சிறுவர்கள்

webteam

லண்டனில் நடைபெறவுள்ள தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு சென்னையில் இருந்து 4 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ள நிலையில், தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை ஒன்று லண்டனில் நடைபெறவுள்ளது. தெருக்களில் சிறுவர்கள் தங்கள் வசதிக்கேற்றதுபோல விதிகளை மாற்றி அமைத்துக்கொண்டு விளையாடுவது தான் தெருக் கிரிக்கெட். அந்த வகையில் லண்டனில் நடத்தப்படும் தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு சென்னையில் இருந்து 4 சிறுவர்கள் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் வடசென்னையில் உள்ள கருணாலயா பொது சேவை மையத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் மும்பையை சேர்ந்து 4 சிறுவர்கள் சேர்ந்து 8 பேர் கொண்ட ஒரே அணியாக லண்டன் செல்லவுள்ளனர். இந்த தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ், நேபால் உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த 10 அணிகள் விளையாடவுள்ளன. இந்தியாவில் வட இந்தியா, தென் இந்தியா என இரு அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இந்த நான்கு சிறுவர்கள் தாய் அல்லது தந்தைய அல்லது இரண்டு பேரையும் இழந்து ஆதரவற்ற நிலையில், ஏழ்மையுடன் கருணாலயா மையத்தில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.