தமிழ்நாடு

மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் - முதல்வர் அறிவிப்பு 

மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் - முதல்வர் அறிவிப்பு 

webteam

மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அப்போது பேசிய அவர், மேட்டூர் உபரிநீரை முதற்கட்டமாக 100 ஏரிகளில் நிரப்புவதை 615 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்திட வரும் ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். இத்திட்டம் ஒரு ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.