பிரபல தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் சென்னையில் காலமானார்.
பத்மவிபூஷண் விருது பெற்ற இவர் நாட்டின் முன்னணி தடய அறிவியல் நிபுணர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆவார். தமிழக அரசின் தடய அறிவியல் துறை இயக்குனராக இருந்த சந்திரசேகரன் அத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் பலவற்றையும் உருவாக்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையுண்ட விதத்தை ஒரு சில மணி நேரங்களில் கண்டறிந்தவர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது