திருச்சி மாவட்ட ஆட்சியர் முன் மண்டியிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயத்திற்கான வட்டியில்லா குறுகிய கால கடனை, மத்திய கால கடனாக மாற்றி தமிழக அரசு 12 சதவிகிதம் வட்டி வசூலிப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டத்திற்கு வந்தவர்கள், டிராக்டருக்கு மானியம் ரத்து செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.
விவசாயிகள் என்ற பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து கடன் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பயிர் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் முன் மண்டியிடும் போராட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் சங்கத்தினர் தரையில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.