முன்னாள் எம்பி உதவியாளர் கொலை pt desk
தமிழ்நாடு

முன்னாள் எம்பி-யின் உதவியாளர் கொலை | தாம்பரத்தில் சம்பவம்.. செஞ்சியில் உடல் கண்டெடுப்பு

தாம்பரத்தில் சொத்திற்காக முன்னாள் எம்பி. குப்புசாமியின் உதவியாளராக இருந்த திமுக பிரமுகர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை தாம்பரத்தில் சொத்திற்காக குமார் (71), என்ற முதியவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரவி உள்ளிட்ட சிலர் காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து அவரை கொலை செய்து செஞ்சி மேல வழக்கலூரில் உடலை புதைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் ரவி, விஜய், செந்தில் ஆகியோரை கைது செய்த தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், குமார் என்பவர் காணாமல் போனதாக புகார் பெறப்பட்ட நிலையில், தற்போது கடத்திக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தாம்பரம் போலீசார் செஞ்சி சென்று உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர். இதையடுத்து குமாரை கொலை செய்து புதைத்த இடத்தை காண்பிப்பதற்காக தாம்பரம் உதவி ஆணையாளர் நெல்சன் தலைமையான குழு, ரவி மற்றும் அவரது கூட்டாளிகளை சம்பவம் இடத்திற்கு அழைத்து பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து ரவியிடம் போலீசார் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர். நாளை புதைக்கப்பட்ட குமார் உடலை தோண்டி எடுக்கப்பட உள்ளதை அடுத்து அடையாளம் காண்பதற்காக குமாரின் உறவினர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.