vijay, sengottaiyan pt web
தமிழ்நாடு

விஜயின் தவெகவுடன் இணைகிறீர்களா? மறுக்காத செங்கோட்டையன்.!

தவெகவில் இணைவது குறித்தக் செய்தியாளர்களின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.

PT WEB

தமிழக வெற்றிக் கழகத்தில் வருகின்ற 27-ஆம் தேதி முக்கிய அரசியல் இணைப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், தவெக கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தவெகவில் இணையவிருப்பது குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் பதிலளித்திருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், ”50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து, அதிமுகவிற்காக உழைத்த எனக்கு கிடைத்தப் பரிசு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து கூட நீக்கப்பட்டிருப்பது. இந்த மனவேதனை உங்களுக்கே தெரியும்” என தவெகவில் இணைவது குறித்து மறுப்பு தெரிவிக்காமல் பேசியிருப்பது, உண்மையிலேயே செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறாரா? என்ற கேள்வியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, அதிமுகவில் நடந்த உட்கட்சிப்பூசல் காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை அதிமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நீக்கியிருந்தார்.