செல்லூர் ராஜூ கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

அப்பா அப்பா என பெண்கள் அலறும் குரல் ஸ்டாலின் அப்பாவுக்கு கேட்கவில்லையா? – செல்லூர் ராஜூ

எங்கள் தலைவர் யாரை சாமி என்கிறாரே அவரை பல்லக்கில் தூக்கிச் செல்வோம். அதே தலைவர் சாமி இல்லையென்று சொன்னால் கீழே இறக்கிவிட்டு போய்விடுவோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரவை பகுதியில், ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசுகையில்...

எங்கள் தலைவர் யாரை சாமி என்கிறாரோ அவரை பல்லக்கில் தூக்கிச் செல்வோம்:

நாங்கள் கஞ்சா விற்பவர்கள் அல்ல. மக்களை துன்பப்படுத்தும், துயரப்படுத்தும் நபர்கள் அல்ல. எந்த கெட்ட காரியத்தையும் செய்யாதவர்கள் அதிமுகவினர். எங்கள் தலைவர் யாரை சாமி என்கிறாரோ அவரை பல்லக்கில் தூக்கிச் செல்வோம். அதே தலைவர் சாமி இல்லையென்று சொன்னால் கீழே இறக்கிவிட்டு போய்விடுவோம். மோடி மஸ்தான் மோடி மஸ்தான் எனச் சொல்வார்கள். அந்த வேலையை திமுக தான் சிறப்பாக செய்வார்கள். என்னென்ன வேஷம் போட முடியுமோ அதையெல்லாம் போட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் என்று சொல்லக் கூடாது அப்பான்னு தான் சொல்லணும்:

நீட் தேர்வு ரத்து ரகசியம் என் தந்தைக்குத் தெரியும் என உதயநிதி ஸ்டாலின் கூறிய நிலையில், கடைசியில் முதல்வர் மத்திய அரசின் கையில் தான் நீட் தேர்வு ரத்து உள்ளது என பேசுகிறார். ஏன்டா கேனப்பயலே இதை தான் நாங்கள் தொடக்கத்திலிருந்து சொல்லுகிறோம். இப்படி பொய்யான தகவல்களை கூறி நிறைய மாணவர்களை இழந்துள்ளோம். ஸ்டாலின் என்று சொல்லக் கூடாது அப்பான்னு தான் சொல்லணும் என கூறுகின்றனர்.

அப்பா அப்பா என பெண்கள் அலறும் குரல் முதல்வருக்கு கேட்கவில்லையா?

16 வயதினிலே படத்தில் சப்பாணி என்று கூப்பிடக் கூடாதுன்னு மயிலு சொல்லியிருக்கு அதனால கோபாலகிருஷ்ணன் என்று தான் கூப்பிட வேண்டுமென்று கமல் சொல்லுவார். அதேபோல முதல்வர் அப்பா அப்பான்னு கூறி வருகிறார். அப்பா அப்பா என பேசும் முதல்வர் இன்றைக்கு தமிழகத்தில் அப்பா அப்பா என பெண்கள் அலறும் அந்தக்குரல் முதல்வருக்கு கேட்கவில்லையா?. சரஸ்வதி சபதம் படத்தில் ஊமையான சிவாஜி அம்மா அம்மா என பேசுவது போல அப்பா அப்பா என பேசுகிறார்.

cm stalin

திமுகவினர் 200 தொகுதிகளில் வெற்றிபெற்று என்ன செய்ய:

திமுகவினர் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்னு பேசுகிறார்கள். வெற்றி பெற்று என்ன செய்ய. இனி வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்யும் நிலை தான் ஏற்படும். கூட்டுறவு பண்டகசாலை கடைகளில் அரிசி விற்பனை திட்டத்திற்கு 50 கோடி வேண்டுமா என ஜெயலலிதா கேட்ட போது 100 கோடி கேட்டுப் பெற்றேன். அதிமுகவில் ஒரு தொகுதியில் சாதாரண தொண்டன் நின்றால் கூட 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவான். மதுரை மேற்குத் தொகுதியில் வேட்பாளர் நிற்பதை எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார்.

கெட் அவுட் மோடி என்று ஸ்டாலின் சொல்லத் தயாரா?

கிளிப்பிள்ளை சொல்வதை போல 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பேசுகிறார் முதல்வர். ஆட்சிக்கு வரும்முன் கோ பேக் மோடி, ஆட்சிக்கு வந்த பின் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கு பிரதமரை அழைத்து வந்து விழா நடத்துகிறார்கள். மறைமுக கூட்டணி வைத்துள்ளார்கள். இப்போது இந்தியை எதிர்க்கிறார்கள். கேலோ இந்தியா என விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்துகிறார்கள். முதல்வர் இந்த ஓராண்டிற்குள் கெட் அவுட் மோடி என பேசிவிட்டால் சுத்தமான வீரன் ஸ்டாலின் தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.