தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் மறைவு

Rasus

தமிழக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் காலமானார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெனிபர் சந்திரன், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெனிபர் சந்திரனின் உயிர் பிரிந்தது. 1996 ஆம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு ஜெனிபர் சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

பின்னர், திமுகவிலிருந்து அதிமுகவுக்கு சென்ற ஜெனிபர் சந்திரன் கடந்த மக்களவைத் தேர்தலின் போது மீண்டும் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.