தமிழ்நாடு

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

webteam

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

டெல்லியில் முரளிதரராவ் தலைமையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் திருக்குறளில் இறைமாட்சி அதிகாரத்தில் இடம்பெற்ற குறளை மேற்கோள் காட்டி, அக்ககுறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இருப்பதாக கூறினார்.

மேலும் கட்சியில் ஒரு தொண்டனாக மட்டுமே செயலாற்ற வந்துள்ளேன் என்றும் பதவி நோக்கத்தில் இணைய வில்லை என்றும் கூறினார். கட்சி சார்பில் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என்றும் அவர் பேசினார்.