செய்தியாளர்: பிரவீண்
இந்திய அணியில் அதிரடி துவக்க வீரராக வலம் வந்த வீரேந்திர சேவாக், கோவை வந்துள்ளார். அங்கு இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலனால் கட்டப்பட்ட பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார் அவர்.
சிவன் மீது பற்று கொண்டவரான சேவாக், பட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். தனக்கு அற்புதமான தரிசனம் கிடைத்ததாக சேவாக் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்