தமிழ்நாடு

கோவை: பா.ஜ.க பிரச்சார பொது கூட்டத்தில் காமராஜர் கட் அவுட்!

webteam

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழகத்திற்கான 12,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தக் கூட்டத்திலும் திருக்குறளை சுட்டிக்காட்டி அவர் பேசினார். முன்னதாக பிரதமரை வரவேற்கும் விதமாக கோவை முழுவதும் சாலைகளில் கொடிகள், கட் அவுட்கள் வைக்கபட்டு உள்ளன.

இதனையடுத்து, கொடிசியா அரங்குக்கு அருகில் உள்ள மைதானத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு பாஜக சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்த கொண்டு பேசுகிறார். இந்த பிரச்சார மேடைக்கு எதிரே வைக்கபட்டு உள்ள பிரமாண்ட கட் அவுட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த காமராஜர் கட் அவுட் இடம் பெற்றுள்ளது. அதற்கு அருகில் அதிமுக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டவர்களின் கட் அவுட்கள் வைக்கபட்டு உள்ளன.

பா.ஜ.க பிரச்சார கூட்டத்தில் பா.ஜ.க வின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த காமராஜர் கட் அவுட் வைக்கபட்டிருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.