தமிழ்நாடு

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

JustinDurai

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதையடுத்து, தோப்பு வெங்கடாசலம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் தோல்வியடைந்தார்.

இதைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் தோப்பு வெங்கடாசலம், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட 900 பேருடன் திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்.

திமுகவில் இணைந்தபின் தோப்பு வெங்கடாசலம் கூறுகையில், ''உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஈரோடு மாவட்டத்தில் 100% வெற்றியை ஈட்டும்'' என்றார்.