தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி தலைமறைவு - விருதுநகர் காவல்துறை தகவல்

ராஜேந்திர பாலாஜி தலைமறைவு - விருதுநகர் காவல்துறை தகவல்

JustinDurai
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 17ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு வெவ்வேறு கார்களில் மாறிமாறி சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.