தமிழ்நாடு

கோவை: அடம் பிடித்த காட்டு யானை.. பேசியே காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினர்!

கோவை: அடம் பிடித்த காட்டு யானை.. பேசியே காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினர்!

webteam

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் பேசியே வனத்துக்குள் அனுப்பி வைத்தனர். அப்போது யானை நடந்து கொண்ட செயல் காண்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. கோவை வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை யானைகளின் நடமாட்டம் அதிக அளவு இருக்கும் இந்த முறையும் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. வால்பாறை அருகே ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. இவை வால்பாறை டவுனை ஒட்டிய வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்ததை கண்ட வனத்துறையினர் அவற்றை வனத்துக்குள் அனுப்ப முயன்றனர். ஒரு யானை சென்றுவிட்டநிலையில், மற்றொரு யானை, ஒரு கோபம் கொண்ட சிறுவனைப்போல நடந்து கொண்ட விதம் காண்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. வனத்துறையினர் கத்தி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விரட்ட முயன்றபோது , கோபம் கொண்ட சிறுவனைப்போல கால்களை தரையில் உதைப்பதும், குழந்தைகள் கோபத்துடன் கத்துவது போல பிளிறியதும் மட்டுமின்றி, திரும்பிப்போகும்‌போதும் மனம் ஆறாமல் அங்கிருந்து செடிகளை முட்டிவிட்டுத்தான் வனத்துக்குள் சென்றது.