தமிழ்நாடு

சீர்காழி : 2 நாட்களாக ஆட்டம் காட்டிய புனுகு பூனை! பத்திரமாக மீட்ட வனத்துறை!!

webteam

சீர்காழி அருகே செங்கமேடு கிராமத்தில் சுற்றித்திரிந்த புனுகு பூனையை பத்திரமாக மீட்டு வனத்துறையினர் காப்புகாட்டில் விட்டனர்.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த செங்கமேடு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் அரியவகை புனுகு பூனை ஒன்று சுற்றித் திரிவதாகவும் அப்பகுதில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் கோழி முட்டைகளை உடைத்துக் கொண்டு செல்வதாகவும் சீர்காழி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வனச்சரகர் குமரேசன் உத்தரவின்பேரில் வனத்துறை ஊழியர்கள் செங்கமேடு கிராமத்தில் கூண்டு வைத்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை வனத்துறையினர் வைத்த கூண்டில் புனுகு பூனை பிடிபட்டது. அதனை வனத்துறையினர் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் உள்ள அரசு காப்பு காட்டில் விட்டனர். இந்த புனுகுப்பூனை சுரப்பியிலிருந்து வெளிப்படும் புனுகு ஆன்மீகத்திலும், சித்த மருத்துவத்திலும், வாசனை திரவியங்கள் தயாரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் காடுகள் அழிக்கப்படுவதால் அழிந்துவரும் விலங்குகளில் புனுகு பூனை இரண்டாம் நிலை பட்டியலில் உள்ளது. இந்த புனுகுப்பூனை கிராமத்தின் அருகே நீர் நிலை ஓரம் உள்ள குறுங் காட்டில் வசித்து உணவுக்காக இந்த கிராமத்திற்குள் வந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.