தமிழ்நாடு

மோப்ப நாயின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வனத்துறையினர்!

webteam

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்படும் மோப்ப நாய் ஆபரின் பிறந்தநாளை வனத்துறையினர் தங்களது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆபர் என்கின்ற மோப்ப நாய் பணியில் சேர்ந்தது. பெல்ஜியம் ஷெப்பெர்ட் (Belgium Sephered) வகையை சேர்ந்த அந்த மோப்ப நாய் முதுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிகழும் வனம் தொடர்பான குற்றங்களை கண்டுபிடிக்கவும், புலி உள்ளிட்டட வனவிலங்குகள் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையில் மோப்ப் நாய் ஆப்பரின் நான்காவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. வனத்துறையினர் தங்களது குடும்பத்துடன் ஆப்பரின் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியோடு கொண்டாடினர். 

வனத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆப்பருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். ஆப்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களும் கலந்து கொண்டனர்.