நீலகிரி மாவட்டம் கூடலூர் மாவட்ட வன அலுவலர் சட்டத்திற்கு புறம்பாக நீலநிற சுழல் விளக்கு பொருத்தப்பட்ட வாகனத்தில் பயணிப்பதாக புகார் எழுந்துள்ளது.
விஐபி கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில், சிவப்பு மற்றும் நீலநிற சுழல் விளக்குகளை வாகனங்களில் பயன்படுத்த சமீபத்தில் மத்திய அரசு தடை விதித்தது. அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் காவல்துறை வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை மட்டும் நீலநிற சுழல் விளக்குகளை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாவட்ட வன அலுவலர் திலீப் பயன்படுத்தும் வாகனத்தில் இன்னும் சுழல் விளக்கு அகற்றப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் நீலச் சுழல் விளக்கு பொருத்திய காரில் பயணம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.