உளுந்தூர்பேட்டையில் வனத் தோட்டக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ. 34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
உளுந்தூர்பேட்டையில் வனத் தோட்டக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.34 லட்சத்து 65 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வனப்பகுதியில் மரக்கன்று நடுவதற்கான ஒப்பந்ததாரரிடம் லஞ்சமாக பெற்ற பணம் என தகவல் வெளியாகியுள்ளது. வட்ட கழக மண்டல மேலாளர் நேசமணி மற்றும் வனவர் சங்கர் கணேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.