தமிழ்நாடு

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு: பொதுமக்கள் பீதி!

webteam

உடுமலை அருகே அமராவதி நகர் பகுதியில் நுழைந்த ஆறரை அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து சின்னார் வனப்பகுதிக்குள் விட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி நகர் பகுதி. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இப்பகுதியில் அமராவதி அணை மற்றும் ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில் அப்பகுதியில் மலைப்பாம்பு சுற்றித்திரிவதைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த வனத்துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். நீண்ட நேரம் போராடி இறுதியாக மலைப்பாம்பை பிடித்தனர். பின் அந்த மலைப்பாம்பை சின்னார் அடர் வனப்பகுதியில் விட்டனர்.