தமிழ்நாடு

தென்காசி: அனுமதியின்றி யானை வைத்திருந்தவர்களுக்கு வனத்துறையினர் அபராதம்

Sinekadhara

கடையம் அருகே அனுமதியின்றி யானை வைத்திருந்தவர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். 

தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த பொட்டல்புதூர் அருகே அனுமதியின்றி யானை வைத்திருப்பதாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது, தொடர்ந்து நேரில் சென்ற வனத்துறையினர் யானை வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கேரளாவில் இருந்து அந்த யானையை இனாமாக பெற்றுவந்தது தெரியவந்தது. மேலும் அதற்கு உரிய அனுமதி இல்லாமல் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குநர் செண்பக பிரியா உத்தரவின்படி அந்த யானையை வைத்திருந்த பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த பீர்முகமது, பக்கர் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று அனுமதியின்றி யானை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் வனத்துறையினர் எச்சரித்தனர்.