தமிழ்நாடு

கொல்லிமலை போறீங்களா ? இதப் படிங்க

webteam

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல ஒரு மாதத்திற்கு தடை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையை சீரமைக்கும் பணி நடைபெறுவதை ஒட்டி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இதில் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் வெள்ளி போல் கொட்டுவதால் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை அருவிக்கு சென்று குளித்து மகிழ்வர். இந்த அருவிக்கு செல்ல 1096 படிகட்டுகளின் வழியாக கீழே இறங்கி அருவிக்கு செல்ல வேண்டும். இந்த படிகட்டுகள் பல சேதமடைந்து சுற்றுலா பயணிகள் செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தது.

வனத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவித்த போது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் உள்ள படிகட்டுகள் பல பழுதடைந்துள்ள நிலையில் பல இடங்களில் பாதுகாப்பாக சுற்றூலா பயணிகள் செல்ல இரும்பு கைப்பிடிகளும் சேதமடைந்துள்ளதால் அதனையும் சீரமைத்து பாதை முழுவதும் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளதால் ஆகாய கங்கை அருவிக்கு செல்லவும், குளிக்கவும் ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகள் முடிவடைந்த உடன் சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.