தமிழ்நாடு

அந்நிய செலாவணி வழக்கு: தினகரன் ஆஜராக உத்தரவு

அந்நிய செலாவணி வழக்கு: தினகரன் ஆஜராக உத்தரவு

webteam

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் ஆகஸ்ட் 16 ம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அந்நிய செலாவணி மோசடியில் டி.டி.வி தினகரன் ஈடுபட்டதாக அவர் மீது கடந்த 1996ம் ஆண்டு அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று மாஜிஸ்திரேட் மலர்மதி முன்பு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவு நகல்களை பெற்ற நீதிபதி, விசாரணைக்காக தினகரன் ஆஜராக உத்தரவிட்டார்.