தமிழ்நாடு

தங்கம் விற்கிற விலைக்கு, தங்கம் என்று பெயர்தான் வைக்க முடியும் - திண்டுக்கல் சீனிவாசன்

தங்கம் விற்கிற விலைக்கு, தங்கம் என்று பெயர்தான் வைக்க முடியும் - திண்டுக்கல் சீனிவாசன்

kaleelrahman

தங்கம் விற்கிற விலைக்கு, தங்கம் என்று பெயர்தான் வைத்துக்கொள்ள முடியும் என்று வருத்தப்பட்டு பேசி வனத்துறை அமைச்சர், அரசு விழாவில் வாக்கு சேகரித்தார்.

நத்தம் அருகே கோபால்பட்டியில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் 406 பெண்களுக்கு ரூ. 1.53 கோடி மதிப்பில் திருமண நிதிஉதவி மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பில் 3.248 கிலோ தங்கம், 230 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். பின்னர் விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது...


தங்கம் விற்கிற விலை உங்களுக்குத் தெரியும். தங்கம், தங்கம்மா என்று பெயர் வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். அந்த அளவிற்கு விலைவாசி தாறுமாறாக உயர்ந்து உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கிறோம். ஏழைகளுக்கு செய்யும் நல்ல அரசாங்கமாக இந்த அரசாங்கம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

5 வருட காலத்தில் நடந்திருக்கிற நன்மைகள் ஏராளம். இப்போது கடன் தள்ளுபடி செய்துள்ளோம். வருகிற 23-ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னென்ன செய்யப் போகிறார்கள் என்று அன்றைக்குத் தெரியும். 23 ஆம் தேதி நல்ல செய்தி கிடைக்கும். எனவே இந்த அரசாங்கத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும். நாங்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருந்து செயல்படுவோம்.

இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு நல்ல அரசாங்கமாக விளங்கும். சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்பதைபோல இந்த ஆட்சி சரியான ஆட்சி என்று நிச்சயமாக நடக்கும். இந்த ஆட்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். எதிரிகள் சொல்வதை எது நல்லது எது கெட்டது என்று கேட்டு அவர்கள் பேச்சை உதாசீனப்படுத்தி நன்மை தருகின்ற எங்களுக்கு நல்லாதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசினார்.