சென்னையில் உள்ள ஆசிஃப் பிரியாணி உணவகத்தில், பிரியாணி தயாரிக்கும் உணவு கூடத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை சீல் வைத்துள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள ஆசிஃப் பிரியாணி உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில் சுகாதாரமற்ற முறையில் பிரியாணி சமைத்து வந்ததாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த உணவகத்தின், உணவு கூடத்திற்கு சீல் வைத்து உணவுப் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புகார்களின் அடிப்படையில் மட்டன் பிரியாணியை சாம்பிள் எடுத்து ஆய்வு செய்ததில் சுகாதாரமற்ற முறையில் தயாரித்தது உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆசிஃப் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், பிரச்னையை சரிசெய்து கொள்ளாததால், பிரியாணி தயாரிக்கும் கூடத்திற்கு சீல் வைத்திருப்பதாக, உணவுப் பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது.