தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ.1.17 கோடி செலவு

ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ.1.17 கோடி செலவு

rajakannan

அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக மட்டும் ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது தெரியவந்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதிலில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. 

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்திற்கும் ஆன செலவு பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு மருத்துவ செலவு மொத்தமாக ரூ.6,85,69,58 ஆகியுள்ளது. 

மருத்துவ செலவு - ரூ1.92 கோடி
மருத்துவர்கள் செலவு - ரூ2.21 கோடி
அறை வாடகை    - ரூ1.24 கோடி
உணவு          - ரூ1.17 கோடி 

இஞ்னியரிங் செலவு - ரூ30.68 லட்சம்

மொத்த செலவு   - ரூ6.85 கோடி

இதில், 6.41 கோடிக்கான காசோலை மட்டும் அதிமுக தரப்பில் இருந்து மருத்துவமனை பெற்றுள்ளது. இன்னும், 44.56 லட்சம் பாக்கி உள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின் பதிலில் இடம்பெற்றுள்ளது.