தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- சென்னையில் பறக்கும் படையினர் தீவிர சோதனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- சென்னையில் பறக்கும் படையினர் தீவிர சோதனை

Sinekadhara

சென்னை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு பணம், பரிசுப் பொருட்கள், போதைப் பொருட்கள், எடுத்துச் செல்கிறார்களா என பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைக்கு உட்படுத்தப்படுவர்களின் வாகன எண் மற்றும் பெயர் தொலைபேசி எண்களை கேட்டு பெற்றுக்கொள்கின்றனர். இந்த பறக்கும் படையினர் அரை மணி நேரத்திற்கு வெவ்வேறு இடங்களில் சோதனைகள் இருக்குமென்றும், நாளை அதே இடத்தில் வேறு நேரத்தில் சோதனை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

ஒரு பறக்கும் படையில் ஒரு உதவி செயற்பொறியாளர், இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர்கள் இருப்பர். சுழற்சி முறையில் மண்டலத்திற்கு மூன்று பறக்கும் படையினர் என 45 பறக்கும் படைகள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.