தமிழ்நாடு

ஆடி வெள்ளி: பூக்கள் விலை திடீர் உயர்வு

ஆடி வெள்ளி: பூக்கள் விலை திடீர் உயர்வு

webteam

ஆடி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு கடலூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. 
60 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரோஜா பூ, 120 ரூபாய்க்கும், நூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ 240 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக வியாபாரிகள் கூறுகின்றனர். 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பங்கி பூ , ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆடி வெள்ளி கிழமை என்பதாலும் பூக்கள் வரத்து குறைந்த காரணத்தாலும் விலை ஏறியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.