தமிழ்நாடு

குற்றாலம் அருவியில் குளிக்க தடை நீக்கம்

குற்றாலம் அருவியில் குளிக்க தடை நீக்கம்

webteam

நெல்லை மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. 

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இன்று காலை வெள்ளம் குறைந்ததால் குளிக்க அனுமதியளிக்கப்பட்டனர்.
தொடர்ந்து குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருவதுடன் இதமான சூழல் நிலவிவருகிறது. விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.