பொன்னேரி | 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.. சாலைக்கு வந்த மக்கள்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்துவரும் நிலையில் திருவள்ளூர் பொன்னேரி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொன்னேரி நகராட்சி நிர்வாகம் மந்தமாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.