தமிழ்நாடு

மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடந்து செல்லும் மாணவிகள்

webteam

மலட்டாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் இடுப்பளவு வெள்ளநீரில் பள்ளி மாணவிகள் ஆபத்தான முறையில் தரைப்பாலத்தை கடந்து செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக சாத்தனூர் அணை திறக்கபட்டுள்ளதால் தென்னைபெண்ணை ஆற்றில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான மலட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மேட்டுப்பாளையம் பரசுரெட்டிப்பாளையம் இடையேயான தரைப்பாலம் மூழ்கி இடுப்பளவு நீர் வேகமாக செல்கிறது. இதையடுத்து அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பரசுரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து ராம்பாக்கம் பள்ளிக்கு சுற்றிச் செல்கின்றனர்.

இதையடுத்து; நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள் இடுப்பளவு தண்ணீரில் தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கடக்க முற்பட்டுள்ளனர். அப்போது தரைப் பாலத்தின் அருகே நின்றிருந்தவர்கள் மாணவிகளை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.