தமிழ்நாடு

15 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்‌சரிக்கை

15 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்‌சரிக்கை

webteam

கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் 15 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்‌சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர்‌ திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு 5வது நாளாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு தொட‌ர்ந்து வினாடிக்கு 1,081 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருகிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி, 1208 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பேரண்டப்பள்ளி, உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம பகுதியினர் ஆற்றையும், தரை மட்ட பாலங்களை கடக்க வேண்டாம் என்று அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.