தமிழ்நாடு

அபாய கட்டத்தை எட்டும் பெருஞ்சாணி அணை - பரளியாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

rajakannan

பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவை எட்டியது. தாமிரபரணி மற்றும் பரளியாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடம் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவான 71 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. அதிக மழை காரணமாக 75 அடியை தொடும்பட்சத்தில் தொடர்ந்து வரும் தண்ணீர் பெருஞ்சாணி அணையில் இருந்து திறந்து விடப்படவுள்ளது. 

இதனால் பரளியாற்றில் திறந்து விடப்பட்டு வலியாற்றுமுகம், அருவிக்கரை, திருவட்டார், மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டணம் கடலில் சேரும். இதனால் பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆற்று கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.