தமிழ்நாடு

தமிழகத்தில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Rasus

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மிதமான மழை பெய்கிறது.

இதனிடையே, பெங்களூரில் பெய்து வரும் தொடர் மழையால் கிருஷ்ணகிரியை அடுத்த கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 2,648 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. எனவே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிகளவு தண்ணீர் செல்வதால், தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ, கடந்து மறுகரைக்கு செல்லவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.