தமிழ்நாடு

சதுரகிரியில் வெள்ளப்பெருக்கு - 200-க்கும் மேற்பட்டோர் தவிப்பு

சதுரகிரியில் வெள்ளப்பெருக்கு - 200-க்கும் மேற்பட்டோர் தவிப்பு

webteam

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி மலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவித்து வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு சென்ற 200=க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மலைக்கோயிலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.