ஊத்தங்கரை | பாம்பாற்றில் வெள்ளப் பெருக்கு – பொதுமக்களுக்கு பொதுப்பணித் துறை எச்சரிக்கை!
ஊத்தங்கரை பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாம்பாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாதென பொதுப்பணித் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.