தமிழ்நாடு

குற்றாலத்தில் வெள்ளம்: அருவிகளில் குளிக்கத் தடை

குற்றாலத்தில் வெள்ளம்: அருவிகளில் குளிக்கத் தடை

webteam

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள  குற்றாலம்  அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் குளிக்கதடை விதித்துள்ளதால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.