தமிழ்நாடு

கனமழை எதிரொலி: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

jagadeesh

கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள பில்லூர் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் நீலகிரி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 100அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97அடியை கடந்தது. தற்போது அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், பவானியாற்றின் கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதி மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.