கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையில் இருந்து 12-வது நாளாக உபரி நீர் திறக்கப்படுவதை அடுத்து 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி பகுதியில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கன மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கே.ஆர்.பி அணை வேகமாக நிரம்பி வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொதுப்பணிதுறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.