தமிழ்நாடு

கடலில் தத்தளித்த மானுக்கு உதவிய மீனவர்கள்

கடலில் தத்தளித்த மானுக்கு உதவிய மீனவர்கள்

webteam

நாகை  கடலில் தத்தளித்த புள்ளி மானை, மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

நாகை மாவட்டத்தில் உள்ள ஆறுகாட்டுத்துறை கடலில் புள்ளி மான் ஒன்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட நாகை மீனவர்கள் மானை, படகின் மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் இருந்த 3 வயது நிரம்பிய இந்த புள்ளி மான், வழி தவறி மீன்பிடி இறங்குதளம் அருகில் கடலில் மாட்டிக்கொண்டது தெரியவந்துள்ளது. கடலில் தத்தளித்த மானை மீட்ட மீனவர்கள் அதனை பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.