மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள் முகநூல்
தமிழ்நாடு

13 நாட்களாக மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்; உணவுக்கு வழியின்றி தவிப்பு!

புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த 13 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாததால் நாகை மாவட்டம் கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்து வரும் ஆயிரம் மீனவர்கள் உணவுக்குக் கூட வழியின்றி வாழ்வாதரம் பாதிக்கப் பட்டுள்ளனர்.

PT WEB

மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் கோடியக்கரையில் தங்கி 200க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர். கோடியக்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடல் சீற்றமாகக் காணப்படுவதுடன் பலத்தக் காற்றும் வீசி வருகிறது.

இது குறித்த மீன்வளத்துறையின் எச்சரிக்கை காரணமாக மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லாததால் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலுக்கு செல்லாததால் நாள்தோறும் 20 லட்சம் ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு எற்பட்டுள்ளதாகவும், மீன்வளத்துறை அனுமதி அளித்த பிறகு தான் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியும் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.