ஒகி புயலால் பாதிக்கப்பட்டு நடுக்கடலில் தவித்த மீனவர்களில் மேலும் 34 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிப்புக்காக சென்ற நிலையில், ஒகி புயலால் அவர்கள் கரை திரும்பவில்லை என உறவினர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் குளச்சலில் இருந்து 6 நாட்டிகல் மைல் தொலைவில் 2 படகுகளைச் சேர்ந்த 15 மீனவர்களை பத்திரமாக மீட்டிருப்பதாக இந்திய கடலோர காவல்படை இன்று காலை தெரிவித்துள்ளது.
மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பது விமானம் மூலம் கண்டறியப்பட்டு அவர்களை கப்பல் மூலம் மீட்டிருப்பதாக கடலோர காவல்படை கூறியுள்ளது. இதேபோன்று குளச்சலைச் சேர்ந்த மேலும் 19 மீனவர்களும் மீட்கப்பட்டிருப்பதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.