கடலூரில் சுருக்குமடி வலைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகளைக் கண்டித்து, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடித் தடைக்காலம் நாளை முடிவடைய உள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்கத் தயாராகி வருகின்றனர். இந்தநிலையில், கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் நேற்று 5 லாரிகளில் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனைக் கண்டித்து முதுநகர் பகுதியில் இருக்கும் உப்பனாற்றின் குறுக்கே படகுகளை நிறுத்தி, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.