தமிழ்நாடு

காணாமல் போனவர்களைத் தேடுவதில் காவல்படையுடன் மீனவர்களும் இணைகிறார்கள்: நிர்மலா சீதாராமன்

காணாமல் போனவர்களைத் தேடுவதில் காவல்படையுடன் மீனவர்களும் இணைகிறார்கள்: நிர்மலா சீதாராமன்

webteam

காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையுடன் மீனவர்களும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒகி புயல் பாதிப்பால் கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கரை திரும்பவில்லை. மேலும் நடுக்கடலில் மீனவர்கள் மீட்கப்படாமல் இருப்பதாக, அவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையுடன் மீனவர்களும் இணைந்து செயல்படுவார்கள் என்று, மத்திய பாதுகாப்பு அமைச்சர்  நிர்மலா சீதாராமன்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள பதிவில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதன் பேரில், மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கடலோர காவல்படையினரின் கப்பலில் தூத்தூர் மீனவர்களும் அழைத்துச் செல்லப்படுவார்கள்  என்று     தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீனவர்களை தேடும் பணியில் இந்த அறிவிப்பு பதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.