தமிழ்நாடு

மீனவர்களை காலதாமதமின்றி மீட்க வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

மீனவர்களை காலதாமதமின்றி மீட்க வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

webteam

காணாமல் போன மீனவர்களை காலதாமதமின்றி மீட்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். 
தேவையான ஹெலிகாப்டர்கள், கடற்படை கப்பல்கள், விசைப்படகுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மீனவர்களை மீட்கிற முயற்சியை விரைவுபடுத்த வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.