வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வு பகுதி, வரும் 26ஆம் தேதி புயலாகமாறக்கூடும் என சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியகாற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதியாகவலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்றுதென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுபெறக்கூடும் என்றும், அது மேலும் அதே திசையில் நகர்ந்து,புயலாக உருவாகுமெனதெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய காற்றழுத்தம் தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 25ல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, கடலூர், நாகை, தஞ்சை,மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்கள் மற்றும் தம்தம் கிராமங்களில் கரைகளில்பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.