தமிழ்நாடு

’சூறைக்காற்று வீசும்...’ மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

’சூறைக்காற்று வீசும்...’ மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

webteam

தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளதால் அடுத்த இரண்டு தினங்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

புதிதாக‌ உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு அல்லது மேற்கு பகுதியை நோக்கி நகரவுள்ளதால் தென்தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம்‌, விழுப்புரம், திருவண்ணாமலை‌‌, கடலூர்‌, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை‌‌யை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான முதல் மித மான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ 

மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகச் சூறைக்காற்று மணிக்கு ஐம்பதிலிருந்து அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்‌கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.