தமிழ்நாடு

மீனவர் வீசிய வலையில் மருத்துவ குணம்வாய்ந்த ராட்சஷ கல் நண்டு

webteam

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் மீனவர் வீசிய வலையில் மருத்துவ குணம்வாய்ந்த ராட்சஷ கல் நண்டுகள் சிக்கியுள்ளன.

ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம் ஏன்?- தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடல் முகத்துவாரம் பகுதியில் உப்பனாறு கலக்கும் இடத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மிகப்பெரிய ராட்சஷ கல்நண்டுகள் இரண்டு சிக்கியது. அந்த நண்டுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு எடுத்து வந்து பார்த்த போது இரண்டு நண்டுகளும் தலா 3 கிலோ எடைகொண்ட பெரிய ராட்சஷ நண்டாக இருந்தது தெரிய வந்தது.

சென்னையில் கொரோனாவுக்கு 27 வயது இளம்பெண் உயிரிழப்பு..!
மீனவர் வலையில் சிக்கிய கல்நண்டு மருத்துவகுணம் கொண்டதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடியவை. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெளிநாடுகளுக்கு நண்டு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்நண்டு அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை என மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இரண்டு நண்டுகளையும் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மிக குறைந்த விலைக்கே வாங்கி சென்றனர்.