தமிழ்நாடு

உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்: மீனவர்கள் அறிவிப்பு

உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்: மீனவர்கள் அறிவிப்பு

webteam

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலைக் கண்டித்து‌ ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மீனவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கானோர், இந்த ‌பிரச்னையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, போராட்டக் குழுவினருடன் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ராமேஸ்வரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவர்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என அப்போது அமைச்சர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து, இன்று‌ அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்து அறிவிக்கப்படும் என மீனவர்கள் கூறியுள்ளனர்.